Skip to main content
🌤️ —°C
செவ்வாய் | 18 ஆகஸ்ட் 2026 | 2 ஆவணி பராபவ வருடம்

மராட்டியத்தில் வருமான வரித்துறை அலுவலகத்தில் திடீர் தீ விபத்து

மராட்டியத்தில் வருமான வரித்துறை அலுவலகத்தில் திடீர் தீ விபத்து
மராட்டிய மாநிலத்தின் மும்பை நகரில் உள்ள சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.7 மாடிகளைக் கொண்ட இந்த அலுவலகத்தில் வழக்கம்போல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், இன்று மதியம் சுமார் 2 மணியளவில் தரைத்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.தொடக்கத்தில் ஏற்பட்ட தீ வேகமாக பரவி, கட்டிடத்தின் மற்ற தளங்களையும் சூழ்ந்தது. இதனால், அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பலர் கட்டிடத்திற்குள் சிக்கிக்கொண்டனர்.தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர், தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement
அதே நேரத்தில், உள்ளே சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.இந்த தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு