Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 09 அக்டோபர் 2026 | 23 புரட்டாசி பராபவ வருடம்

மணப்பாடு அருகே கடலில் மீன்பிடி வலைகளை சேதப்படுத்தி சென்ற வணிகக் கப்பல்: ரூ.1.10 லட்சம் நஷ்டம்...

மணப்பாடு அருகே கடலில் மீன்பிடி வலைகளை சேதப்படுத்தி சென்ற வணிகக் கப்பல்: ரூ.1.10 லட்சம் நஷ்டம்...

தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் வலைகளை வணிகக் கப்பல் ஒன்று சேதப்படுத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மீனவர்கள் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளனர். கடந்த 7-ஆம் தேதி மணப்பாடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் வழக்கம்போல் நாட்டுப் படகுகளில் கடலுக்குச் சென்று மீன்பிடித்தனர். கரையிலிருந்து சுமார் 7.5 கடல் மைல் தொலைவில் அவர்கள் வலைகளை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த ‘சீ ஏஞ்சல்’ என்ற பிரம்மாண்ட வணிகக் கப்பல், கடலில் போடப்பட்டிருந்த வலைகளின் மீது ஏறிச் சென்றதாகக் கூறப்படுகிறது. கப்பல் வலைகளின் மீது சென்றதால், அவை சிக்கி இழுக்கப்பட்டு முற்றிலும் சேதமடைந்தன. இதன் காரணமாக, சுமார் ரூ.1.10 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகளை மீனவர்கள் இழந்தனர். அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் இந்தச் சம்பவம் அமைந்துள்ளது.

Advertisement
வலைகள் சேதமடைவதைக் கண்ட மீனவர்கள், தங்களது சிறிய படகுகளில் இருந்தபடியே கப்பலை நோக்கிக் கூச்சலிட்டும், சைகைகள் மூலமாகவும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இருப்பினும், கப்பல் நிறுத்தப்படாமல் தொடர்ந்து சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடலின் நடுவே வலைகளை இழந்து மீனவர்கள் தவிக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனால் கடலோரப் பகுதிகளில் இந்தச் சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. சர்வதேச கப்பல் போக்குவரத்துப் பாதையை ஒட்டிய கடல் பகுதியில் மீன்பிடிக்கும்போது இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைத் தடுக்க, இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு