மேட்டூர் அணையை திறந்துவைத்த 7-வது முதல்-அமைச்சர் விஜய்..!
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சாவூர் உள்ளிட்ட 13 டெல்டா மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய நீராதாரமாக மேட்டூர் அணை உள்ளது. கடந்த 1934-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணையின் முழு கொள்ளளவு 120 அடியாகும். இதன் நீரை நம்பி குறுவை, சம்பா, தாளடி உள்ளிட்ட சாகுபடிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தமிழ்நாட்டில் நடைபெறும் நெல் சாகுபடியில் சுமார் மூன்றில் ஒரு பங்கு டெல்டா மாவட்டங்களிலேயே நடைபெறுகிறது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் சுமார் 17 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.சுமார் 93 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட மேட்டூர் அணை, பாசனத்துக்காக வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி திறக்கப்படுவது வழக்கம். எனினும், தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யாத காலங்களில் அந்த தேதியில் அணையை திறப்பதில் சிக்கல் ஏற்படும்.அந்த வகையில், இந்த ஆண்டும் வழக்கமான காலத்தில் அணையை திறக்க முடியாத நிலை ஏற்பட்டதால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது.