மக்களை உயிர் பயத்துடன் வாழும் நிலைக்குத் தள்ளியுள்ளார் முதல்வர் விஜய்: கனிமொழி விமர்சனம்
அம்பாசமுத்திரத்தில் திருமண மண்டப உரிமையாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய்யை திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், அம்பாசமுத்திரத்தில் திருமண மண்டப உரிமையாளர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது மேலும் ஒரு அதிர்ச்சியளிக்கும் சம்பவம் என தெரிவித்துள்ளார். முந்தைய ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு நிலை சரியில்லை எனக் கூறி மக்களிடம் வாக்கு கேட்டு ஆட்சிக்கு வந்த முதல்வர் விஜய், தற்போது மக்கள் அச்சத்துடன் வாழும் சூழலை உருவாக்கியுள்ளதாக கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.