Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 30 செப்டம்பர் 2026 | 14 புரட்டாசி பராபவ வருடம்

பெண் யூடியூபர் வீட்டில் 118 பவுன் நகை கொள்ளை: ‘இதுதான் என்னை தூண்டியது’ - கைதான வாலிபர் வாக்குமூலம்

பெண் யூடியூபர் வீட்டில் 118 பவுன் நகை கொள்ளை: ‘இதுதான் என்னை தூண்டியது’ - கைதான வாலிபர் வாக்குமூலம்

ரூ.30 லட்சம் கடனில் சிக்கித் தவித்த நிலையில், பெண் யூடியூபர் மதுமிதா வெளியிட்ட நகை, பணம் தொடர்பான ‘ரீல்ஸ்’ வீடியோக்களே தன்னை கொள்ளையடிக்க தூண்டியதாக கைதான இசக்கிபாண்டி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மதுமிதாவின் சமூக வலைத்தள பக்கத்தை பின்தொடர்ந்து வந்த இசக்கிபாண்டி, அவர் வெளியிட்ட நகை மற்றும் பணம் தொடர்பான வீடியோக்களை பார்த்துள்ளார். மேலும், மதுமிதாவிடம் சமூக வலைத்தள சாட்டிங் மூலம் அதிக வருமானம் ஈட்டுவது குறித்து ஆலோசனைகளையும் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை நேரில் சந்திக்க வேண்டும் எனக் கூறி, அவரது முகவரி குறித்த தகவல்களையும் தெரிந்துகொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கொள்ளை தொடர்பாக இசக்கிபாண்டி அளித்ததாக கூறப்படும் வாக்குமூலத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வருமாறு: “எனக்கு ரூ.30 லட்சம் கடன் இருந்தது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக் கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்து வந்தனர். கடனை எப்படி அடைப்பது என்று தெரியாமல் இருந்தேன். அப்போது மதுமிதா தனது வீட்டில் அதிக அளவில் நகை, பணம் இருப்பது போன்ற வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்ததை பார்த்தேன். இதனால் அவரது வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டேன். ஆசாரிபள்ளத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, கடந்த ஒரு மாதமாக அங்கு தங்கியிருந்து மதுமிதாவின் வீட்டை கண்காணித்து வந்தேன். அவரது வீட்டை கண்டுபிடிப்பதற்காக, அவர் வெளியிட்டிருந்த வீடியோவில் இடம்பெற்றிருந்த மகளின் மழலைப் பள்ளி முகவரியை பயன்படுத்தினேன். அதன் மூலம் மதுமிதாவின் வீட்டையும் எளிதாக கண்டுபிடித்தேன். வீட்டின் அருகே மதுமிதாவின் கார் இருந்தால், வீட்டில் ஆட்கள் இருப்பதாக நினைத்துக்கொள்வேன்.

Advertisement
சம்பவத்தன்று வீட்டை நோட்டமிட்டபோது கார் அங்கு இல்லாததால், வீட்டில் யாரும் இல்லை என்பதை தெரிந்துகொண்டேன். இதையடுத்து சுவர் ஏறி குதித்து வீட்டுக்குள் சென்றேன். பின்னர் மரம் அறுக்கும் இயந்திரத்தை பயன்படுத்தி கதவை உடைத்து உள்ளே நுழைந்தேன். மதுமிதா ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் வீட்டுக்குள் எடுக்கப்பட்ட வீடியோக்களை பதிவிட்டிருந்ததால், வீட்டின் அமைப்பு, அறைகள், பீரோ மற்றும் கட்டில்கள் இருக்கும் இடம் உள்ளிட்டவற்றை முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்தேன். இது நகைகளை எளிதாக கொள்ளையடிக்க உதவியாக இருந்தது. பின்னர் பீரோவை உடைத்து அதிலிருந்த நகைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றேன். நண்பர்களின் உதவியுடன் கொள்ளையடித்த நகைகளை விற்று பணமாக்கி, கடனை அடைத்துவிட்டு வேறு ஊருக்கு சென்றுவிடலாம் என்று திட்டமிட்டிருந்தேன். அதன்படி சில நகைகளை நண்பர்கள் உதவியுடன் விற்றேன். இதற்கிடையில் கொள்ளை சம்பவம் தொடர்பான செய்திகள் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியானதை பார்த்தேன். இதனால் போலீசாரிடம் சிக்கிவிடுவோமோ என்ற அச்சம் ஏற்பட்டது. போலீசாரிடம் பிடிபடாமல் இருக்க வீட்டில் இருந்த பை மற்றும் சில உடைமைகளை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றபோது போலீசார் என்னை கைது செய்துவிட்டனர்” என அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளைக்குப் பின்னர் தனது சொந்த ஊருக்குச் சென்ற இசக்கிபாண்டி, அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக மொட்டை அடித்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்து அவரை கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,640
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு