Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 20 அக்டோபர் 2026 | 3 ஐப்பசி பராபவ வருடம்

பெண்களிடம் தவறாக நடந்துகொண்டதாக புகார்: தனியார் பேருந்து ஊழியர்களுக்கு தவெக எம்.எல்.ஏ செல்வம் நடவடிக்கை

பெண்களிடம் தவறாக நடந்துகொண்டதாக புகார்: தனியார் பேருந்து ஊழியர்களுக்கு தவெக எம்.எல்.ஏ செல்வம் நடவடிக்கை

விருதுநகர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்தில், பெண்களிடம் முறைகேடாக நடந்துகொண்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட ஊழியர்களை ஒரு மாதம் பணியிடை நீக்கம் செய்து தவெக எம்.எல்.ஏ செல்வம் உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் செல்லும் வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்து ஊழியர்கள், சில நாட்களுக்கு முன்பு பெண்களிடம் தவறான முறையில் நடந்துகொண்டதாகவும், பேருந்து விருதுநகருக்குச் செல்லாது எனக் கூறியதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, நேற்று சம்பவ இடத்துக்குச் சென்ற தவெக எம்.எல்.ஏ செல்வம், பேருந்து ஊழியர்களிடம் நேரடியாக விசாரணை நடத்தினார்.

Advertisement
அவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்ட அவர், முதலில் மூன்று மாதங்கள் பணியிடை நீக்கம் செய்வதாக தெரிவித்தார். ஆனால், ஊழியர்கள் தங்களது குடும்பச் சூழலை எடுத்துரைத்து, பணியிடை நீக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறினர். இதனைத் தொடர்ந்து, அவர்களுக்கான பணியிடை நீக்க காலத்தை ஒரு மாதமாகக் குறைத்து எம்.எல்.ஏ செல்வம் உத்தரவிட்டார். பெண்களிடம் இதுபோன்ற முறைகேடான செயல்கள் நடைபெறுவதைத் தடுக்கும் நோக்கிலேயே பேருந்து ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,535
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு