Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 01 அக்டோபர் 2026 | 15 புரட்டாசி பராபவ வருடம்

புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கு: தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு

புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கு: தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியான காக்கா என்ற கருணாஸுக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை சென்னை ஐகோர்ட்டு ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளது. இந்த வழக்கில் கருணாஸின் குற்றம் நிரூபிக்கப்பட்டதை நீதிபதிகள் டாக்டர் அனிதா சுமந்த் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்தது. இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் அவர் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டது. அதேவேளையில், குற்றத்தின் தன்மை மற்றும் குற்றவாளி தொடர்பான சூழ்நிலைகளை பரிசீலித்த நீதிபதிகள், ஏற்கனவே விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி இன்று உத்தரவிட்டனர்.

Advertisement
இந்த வழக்கில் புதுச்சேரி காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக்குழு நடத்திய விசாரணைக்கும் நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர். வழக்கை விரைந்து, முழுமையாகவும், மிகுந்த கவனத்துடனும் விசாரித்ததற்காக சிறப்பு புலனாய்வுக்குழுவினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பில் இந்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் மற்றும் புதுச்சேரி அரசு குற்றவியல் வழக்கறிஞர் ராமச்சந்திரமூர்த்தி ஆகியோர் ஆஜராகினர். குற்றவாளி தரப்பில் மூத்த வழக்கறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோவன் மற்றும் அவரது குழுவினர், வழக்கறிஞர் ஸ்ரீதேவி ஆகியோர் ஆஜராகினர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,640
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு