Skip to main content
🌤️ —°C
செவ்வாய் | 18 ஆகஸ்ட் 2026 | 2 ஆவணி பராபவ வருடம்

பா.ஜ.வில் இருந்து விலகுவதாக அறிவித்த ஷெசாத் பூனாவாலா

பா.ஜ.வில் இருந்து விலகுவதாக அறிவித்த ஷெசாத் பூனாவாலா
புதுடெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த ஷெசாத் பூனாவாலா (38), கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.வழக்கறிஞரான அவர், தனது அரசியல் வாழ்க்கையை காங்கிரஸ் கட்சியில் தொடங்கினார். 2017-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் பதவிக்கான உள்கட்சி தேர்தலில், ராகுல் காந்திக்கு ஆதரவான நடைமுறைகள் பின்பற்றப்படுவதாக குற்றம்சாட்டிய அவர், பின்னர் அந்தக் கட்சியில் இருந்து விலகினார்.அதன்பிறகு பா.ஜ.வில் இணைந்த ஷெசாத் பூனாவாலாவுக்கு தேசிய செய்தித் தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று, கட்சியின் முக்கிய பேச்சாளர்களில் ஒருவராக அவர் அறியப்பட்டார்.கடந்த மாதம் 30-ஆம் தேதியே அவர் தனது விலகல் முடிவை கட்சியிடம் தெரிவித்திருந்தார்.
Advertisement
இருப்பினும், அந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.இரண்டு வாரங்கள் ஆலோசனை மேற்கொண்ட பிறகு, கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக ஷெசாத் பூனாவாலா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில், குடும்பத்தில் ஏற்பட்டுள்ள நிதிச் சிக்கல் காரணமாக தனியார் துறையில் பணியாற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளார். மேலும், பா.ஜ.வில் இருந்து விலகினாலும் பிரதமர் மோடியுக்கும் கட்சிக்கும் தனது ஆதரவு தொடரும் என்றும், கட்சியில் இருந்து மட்டுமே விலகுகிறேன்; அதன் கொள்கைகளில் இருந்து விலகவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு