Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 01 அக்டோபர் 2026 | 15 புரட்டாசி பராபவ வருடம்

பெண்கள் கவனத்திற்கு.. வெற்றிப் பயண திட்டத்தில் அரசு பஸ்களில் எவ்வளவு தூரம் இலவசமாக பயணிக்கலாம்?

பெண்கள் கவனத்திற்கு.. வெற்றிப் பயண திட்டத்தில் அரசு பஸ்களில் எவ்வளவு தூரம் இலவசமாக பயணிக்கலாம்?

தமிழகத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியின்போது தொடங்கப்பட்ட மகளிர் விடியல் பயண திட்டத்தின் கீழ், சாதாரண நகர அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். தற்போது ஆட்சியில் உள்ள த.வெ.க. அரசு, இந்த திட்டத்தின் பெயரை ‘வெற்றிப் பயணத் திட்டம்’ என மாற்றியுள்ளதுடன், அதன் பயன்பாட்டையும் விரிவுபடுத்தியுள்ளது. அதன்படி, சாதாரண நகர பஸ்கள் மட்டுமின்றி எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ். மற்றும் டீலக்ஸ் அரசு பஸ்களிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை (அக்.2) சென்னையில் உள்ள கோயம்பேடு பஸ் நிலையத்தில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இந்த திட்டத்தை தொடங்கி வைக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ். மற்றும் டீலக்ஸ் பஸ்களிலும் இலவச பயணம் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பெண்கள் எவ்வளவு தூரம் வரை பயணிக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக, சென்னையில் இருந்து கோவை அல்லது நாகர்கோவில் போன்ற தொலைதூர இடங்களுக்கு செல்ல முடியுமா? அவ்வாறு செல்ல முடியும் என்றால், எத்தனை பஸ்கள் மாற வேண்டியிருக்கும்? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பொதுவாக அரசு எக்ஸ்பிரஸ் பஸ்கள் 30 முதல் 100 கி.மீ. வரையிலும், எல்.எஸ்.எஸ். பஸ்கள் 30 முதல் 40 கி.மீ. வரையிலும், டீலக்ஸ் பஸ்கள் 30 முதல் 50 கி.மீ. வரையிலும் இயக்கப்படுகின்றன. இதில் எக்ஸ்பிரஸ் பஸ்களே அதிக தொலைவு இயக்கப்படுவதால், அவற்றை அடுத்தடுத்து பயன்படுத்தி பெண்கள் நீண்ட தூரம் இலவசமாக பயணிக்க முடியும்.

Advertisement
உதாரணமாக, சென்னையில் இருந்து செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி என வழித்தடத்தில் பஸ்களை மாற்றி மாற்றி பயணம் மேற்கொள்ள முடியும். இதுபோல், திருச்சி–திண்டுக்கல், தஞ்சாவூர்–நாகப்பட்டினம், தஞ்சாவூர்–வேளாங்கண்ணி, திண்டிவனம்–விழுப்புரம், விருத்தாசலம்–திருச்சி, கோவை–பழனி, பழனி–திண்டுக்கல், கோவை–ஈரோடு, ஈரோடு–சேலம், மதுரை–விருதுநகர், விருதுநகர்–கோவில்பட்டி, திருநெல்வேலி–நாகர்கோவில் உள்ளிட்ட வழித்தடங்களிலும் எக்ஸ்பிரஸ் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம். திருநங்கைகளுக்கும் இந்த இலவச பயண வசதி வழங்கப்படுகிறது. வெற்றிப் பயணத் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ். மற்றும் டீலக்ஸ் வகைகளைச் சேர்ந்த 12,692 அரசு பஸ்களில் பெண்களும், திருநங்கைகளும் கட்டணம் செலுத்தாமல் பயணிக்க முடியும். இந்த திட்டத்தின் மூலம் தினமும் சுமார் 84 லட்சம் பெண்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நாளொன்றுக்கு 16 லட்சத்துக்கும் அதிகமான ஒரு வழிப் பயணங்கள் மேற்கொள்ளப்படுவதற்கும் இந்த திட்டம் வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,640
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு