நிவின் பாலி, மமிதா பைஜு நடித்த ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படத்தின் வசூல் விவரம்
கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜு நடிப்பில் வெளியாகியுள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், வெளியான மூன்று நாட்களில் உலகளவில் ரூ.63 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.‘பிரேமலு’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை கிரிஷ் ஏ.டி. இயக்கி வந்தார். ஆனால், கதையில் முழுமையான திருப்தி இல்லாததால் அந்தப் படத்தின் பணிகள் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது இயக்கத்தில் உருவான புதிய படமாக ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ வெளியாகியுள்ளது.இந்தப் படத்தில் நிவின் பாலி கதாநாயகனாகவும், மமிதா பைஜு கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். ஷியாம், சங்கீத் பிரதாப், வினய் போர்ட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பகத் பாசில், திலீஷ் போத்தன், ஷியாம் புஷ்கரன் ஆகியோர் ‘பாவனா ஸ்டுடியோஸ்’ சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளனர். விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார்.ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் மூன்று நாள் வசூல் தொடர்பான தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, உலக அளவில் மூன்று நாட்களில் ரூ.63 கோடி வசூல் செய்துள்ளது.காதல் மற்றும் நகைச்சுவையை மையமாகக் கொண்ட இப்படம் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருவதால், விரைவில் ரூ.100 கோடி வசூல் சாதனையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.