Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 21 செப்டம்பர் 2026 | 5 புரட்டாசி பராபவ வருடம்

தேனி, சிவகங்கையில் களைகட்டிய மாட்டு வண்டி பந்தயங்கள் - சீறிப் பாய்ந்த காளைகள்

தேனி, சிவகங்கையில் களைகட்டிய மாட்டு வண்டி பந்தயங்கள் - சீறிப் பாய்ந்த காளைகள்

தேனி மாவட்டம் வைகை அணை அருகே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 100-க்கும் மேற்பட்ட ஜோடி காளைகள் பங்கேற்று சீறிப் பாய்ந்தன. சாலையோரங்களில் திரண்டிருந்த ஏராளமான பொதுமக்கள் போட்டியை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். இதேபோல், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வ.உ.சிதம்பரனாரின் 155-வது பிறந்தநாளை முன்னிட்டு முதலாம் ஆண்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

Advertisement
இதில் சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த 61 ஜோடி மாடுகள் பங்கேற்றன. சீறிப்பாய்ந்த மாடுகளின் பந்தயத்தை பொதுமக்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,285
🥈 Silver ₹260.00
Petrol ₹107.77
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு