தேசிய தன்னார்வ ரத்ததான நாளை முன்னிட்டு, ரத்ததானம் செய்யும் கொடையாளர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், தன்னார்வமாக ரத்ததானம் செய்து உயிர்களைக் காப்பாற்றி வரும் அனைத்து ரத்தக் கொடையாளர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அறுவை சிகிச்சை, விபத்து உள்ளிட்ட பல்வேறு அவசர சூழல்களில் உயிரைக் காப்பாற்ற ரத்ததானம் முக்கியமானதாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஒருவர் வழங்கும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் ஒரு உயிரைக் காப்பதுடன், அந்தக் குடும்பத்தின் எதிர்கால நம்பிக்கையையும் பாதுகாக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
Advertisement
தன்னலமின்றி ரத்ததானம் செய்யும் கொடையாளர்கள் சமூகத்தின் உயிர்காக்கும் தூதர்களாக விளங்குவதாகவும், அவர்களின் சேவையும் மனிதநேயமும் எப்போதும் பாராட்டுக்குரியது என்றும் விஜய் கூறியுள்ளார். மேலும், தன்னார்வ ரத்ததானத்தின் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, ரத்ததானம் செய்யும் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க இந்த நாளில் உறுதியேற்போம் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். ரத்ததானம் செய்து உயிர்களைக் காப்போம் என்றும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.