Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 26 அக்டோபர் 2026 | 9 ஐப்பசி பராபவ வருடம்

தேசிய ஜூனியர் தடகளம்: உயரம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை நிவேதா தங்கம் வென்று அசத்தல்

தேசிய ஜூனியர் தடகளம்: உயரம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை நிவேதா தங்கம் வென்று அசத்தல்

சென்னை நேரு ஸ்டேடியத்தில் தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 41-வது தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பல்வேறு பிரிவுகளில் தமிழக வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை வென்று சாதனை படைத்து வருகின்றனர். பெண்களுக்கான 16 வயதுக்கு உட்பட்டோர் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த நிவேதா 1.52 மீட்டர் உயரம் தாண்டி முதலிடம் பிடித்தார். இதன் மூலம் அவர் தங்கப் பதக்கத்தை வென்றார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த நைஷா ராகவ் 1.50 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தையும், உத்தரபிரதேசத்தின் அங்கிதா 1.48 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர். இதேபோல், 16 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 80 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை வர்ஷிகா 11.61 வினாடிகளில் இலக்கை எட்டி தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழகத்தின் ராஜஸ்ரீ 14.07 வினாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்து வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.

Advertisement
மேலும், 14 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான ஈட்டி எறிதலில் தமிழக வீராங்கனை கானாஸ்ரீ 39.04 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். ஆண்களுக்கான 20 வயதுக்கு உட்பட்டோர் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் அம்ப்ரிஷ் 2.18 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கத்தை வென்றார். அத்துடன், போட்டியின் சாதனையையும் சமன் செய்தார். 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 110 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீரர் கிரிபால் கார்த்திக் 13.56 வினாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்து வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார். இந்தப் போட்டியில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த யாஷ் முலிக் 13.29 வினாடிகளில் இலக்கைக் கடந்து தங்கப் பதக்கத்தை வென்றார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,070
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு