Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 28 ஆகஸ்ட் 2026 | 12 ஆவணி பராபவ வருடம்

தூத்துக்குடி: கடலில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு – போலீசார் விசாரணை

தூத்துக்குடி: கடலில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு – போலீசார் விசாரணை
தூத்துக்குடி புதிய துறைமுகம் அருகே கடலில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கடலோரக் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.புதிய துறைமுக முகத்துவாரத்திற்கு சற்று தெற்குப் பகுதியில் கடலில் ஆண் ஒருவரின் சடலம் மிதப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மீனவர் காலனி கடலோரக் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, கடலில் மிதந்த சடலத்தை மீட்டனர்.பின்னர், மீட்கப்பட்ட சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.சடலமாக மீட்கப்பட்ட நபரின் பெயர், வயது மற்றும் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது உள்ளிட்ட அடையாள விவரங்கள் இதுவரை தெரியவில்லை.
Advertisement
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள கடலோரக் காவல் நிலைய போலீசார், உயிரிழந்தவர் யார், அவர் எந்தச் சூழலில் கடலில் விழுந்தார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு