Skip to main content
🌤️ —°C
சனி | 22 ஆகஸ்ட் 2026 | 6 ஆவணி பராபவ வருடம்

திருப்பதி கோவிலில் ஒரே நாளில் ரூ.4.15 கோடி உண்டியல் காணிக்கை

திருப்பதி கோவிலில் ஒரே நாளில் ரூ.4.15 கோடி உண்டியல் காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.அந்த வகையில், நேற்று 78 ஆயிரத்து 57 பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர். 33 ஆயிரத்து 406 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். ஒரே நாளில் உண்டியல் மூலம் ரூ.4 கோடியே 15 லட்சம் காணிக்கையாக கிடைத்தது.மேலும், 4 லட்சத்து 62 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 2 லட்சத்து 40 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது. அஸ்வினி மருத்துவமனையில் 3 ஆயிரத்து 349 பேர் சிகிச்சை பெற்றனர்.நேற்றைய நிலவரப்படி, திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்சின் 31 கம்பார்ட்மெண்டுகளிலும் பக்தர்கள் நிரம்பியிருந்தனர்.
Advertisement
இதனால் சிலாதோரணம் பகுதி வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்ட ‘டைம் ஸ்லாட்’ டோக்கன் இல்லாமல் இலவச தரிசனத்துக்கு வந்த பக்தர்கள், சுமார் 12 மணி நேரம் வரை காத்திருந்து ஏழுமலையானை தரிசித்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு