Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
புதன் | 09 செப்டம்பர் 2026 | 24 ஆவணி பராபவ வருடம்

திருப்பதி கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.5.59 கோடி

திருப்பதி கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.5.59 கோடி

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று மட்டும் 71 ஆயிரத்து 297 பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்துள்ளனர். மேலும், 32 ஆயிரத்து 783 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். அன்று கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ.5 கோடியே 59 லட்சமாக இருந்தது. அதே நாளில் 3 லட்சத்து 72 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Advertisement
2 லட்சத்து 90 ஆயிரம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் பெற்றுள்ளனர். அஸ்வினி மருத்துவமனையில் 4 ஆயிரத்து 194 பேர் சிகிச்சை பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்ட டைம் ஸ்லாட் டோக்கன் இல்லாமல் இலவச தரிசனத்திற்கு சென்ற பக்தர்கள், சாமி தரிசனம் செய்ய சுமார் 24 மணி நேரம் வரை காத்திருந்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு