Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 13 அக்டோபர் 2026 | 27 புரட்டாசி பராபவ வருடம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா தம்பதி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா தம்பதி தரிசனம்

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது, இருவரும் பாரம்பரிய உடையில் எளிமையாகக் காட்சியளித்தனர். விஜய் தேவரகொண்டா வெள்ளை நிற சில்க் சட்டை, வேட்டி அணிந்திருந்தார். ராஷ்மிகா மந்தனா மஞ்சள் நிறப் புடவை மற்றும் மெஜந்தா நிற ரவிக்கையில் வந்திருந்தார். இருவரும் இணைந்து நடித்துள்ள ‘ரணபாலி’ திரைப்படம் வரும் அக்டோபர் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Advertisement
இதையொட்டி, படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் இருவரும் பங்கேற்று வருகின்றனர்.திருமணத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து நடித்துள்ள இந்தப் படம் வெளியாகவிருக்கும் நிலையில், விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா திருப்பதி ஏழுமலையானைத் தரிசித்துள்ளனர். இதற்கு முன்னதாக, இருவரும் சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு