Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 30 செப்டம்பர் 2026 | 14 புரட்டாசி பராபவ வருடம்

திருச்சியில் இருந்து 1,300 கி.மீ. பயணம்... மும்பையில் நிறுவப்பட்ட பிரமாண்ட இரும்பு பாலம்

திருச்சியில் இருந்து 1,300 கி.மீ. பயணம்... மும்பையில் நிறுவப்பட்ட பிரமாண்ட இரும்பு பாலம்

மும்பை–ஆமதாபாத் இடையே அமைக்கப்பட்டு வரும் புல்லட் ரெயில் திட்டத்துக்காக, தமிழ்நாட்டின் திருச்சியில் தயாரிக்கப்பட்ட 1,405 டன் எடையுள்ள பிரமாண்ட இரும்புப் பாலம் மராட்டிய மாநிலம் பிவண்டியில் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளது. மும்பை–ஆமதாபாத் இடையேயான பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கும் வகையில், 508 கி.மீ. தொலைவுக்கு நாட்டின் முதல் அதிவேக புல்லட் ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மும்பையை ஒட்டியுள்ள தானே மாவட்டம் பிவண்டியில் திவா–அஞ்சூர் கிராமங்களுக்கு இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் இந்த இரும்புப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 100 மீட்டர் நீளமும், 14 மீட்டர் உயரமும், 14 மீட்டர் அகலமும் கொண்ட இந்த பாலம் 1,405 டன் எடை கொண்டதாகும். மும்பை–ஆமதாபாத் புல்லட் ரெயில் திட்டத்தில் மொத்தம் 28 இரும்புப் பாலங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement
இதில் தற்போது 16 பாலங்களின் நிறுவல் பணிகள் நிறைவடைந்துள்ளன. ஏற்கனவே 15 பாலங்கள் குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மராட்டிய மாநிலத்தில் நிறுவப்பட்ட முதல் இரும்புப் பாலம் இதுவாகும் என தேசிய அதிவேக ரெயில் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் உள்நாட்டு தொழில்நுட்பத் திறனை வெளிப்படுத்தும் வகையில், இந்த பிரமாண்ட பாலம் திருச்சியில் உள்ள பட்டறையில் தயாரிக்கப்பட்டது. பின்னர் அதன் பாகங்கள் கனரக டிரெய்லர் வாகனங்கள் மூலம் சுமார் 1,300 கிலோமீட்டர் தூரம் கொண்டு செல்லப்பட்டு, பிவண்டியில் ஒன்றிணைத்து நிறுவப்பட்டுள்ளன.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,640
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு