Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

தவெகவில் இணைய ஓ.பன்னீர்செல்வம் முடிவு: விரைவில் எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா

தவெகவில் இணைய ஓ.பன்னீர்செல்வம் முடிவு: விரைவில் எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா
தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், முன்னாள் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட கருத்து மோதலைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, அ.தி.மு.க.வில் இருந்து விலகிய அவர், கே.ஏ.செங்கோட்டையன் சென்ற வழியில் தவெகவில் இணையலாம் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. அவரது மகன் ரவீந்திரநாத்தும் இதே விருப்பத்தை கொண்டிருந்ததாக கூறப்பட்டது.இதற்கிடையில், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க., ஓ.பன்னீர்செல்வத்தை தங்கள் அணியில் இணைத்துக்கொண்டது. ஆனால், எதிர்பாராத வகையில் சட்டமன்ற தேர்தலில் தவெக ஆட்சியை கைப்பற்றியதால், தி.மு.க. எதிர்க்கட்சியாக மாறியது.கடந்த பிப்ரவரி மாதம் தி.மு.க.வில் இணைந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு இதுவரை எந்த முக்கிய பொறுப்பும் வழங்கப்படவில்லை. மேலும், தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தனது அரசியல் பயணம் குறித்து அவர் ஆலோசித்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த சூழலில், தற்போதைய அரசியல் நிலவரத்தை கருத்தில் கொண்டு தவெகவில் இணைவது சரியான முடிவாக இருக்கும் என ரவீந்திரநாத் தனது தந்தையிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஓ.பன்னீர்செல்வமும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.இதனைத் தொடர்ந்து, தவெக பொதுச் செயலாளரும் அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆகியோருடன் ரவீந்திரநாத் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அமைச்சர்கள் இருவரும் ஓ.பன்னீர்செல்வத்தின் விருப்பத்தை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யிடம் தெரிவித்ததாகவும், அவரும் இதற்கு ஒப்புதல் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
Advertisement
தற்போது தென்மாவட்டங்களில் தவெகவுக்கு அரசியல் ரீதியாக வலுவான முகம் தேவைப்படுவதாக கருதப்படுவதால், ஓ.பன்னீர்செல்வத்தின் இணைப்பு கட்சிக்கு பலம் சேர்க்கும் என அக்கட்சி தலைமை நம்புவதாக கூறப்படுகிறது.முன்னாள் முதல்-அமைச்சர் என்ற அடிப்படையில், தவெகவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முக்கிய பொறுப்பு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதையடுத்து, தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் தவெகவில் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இடைத்தேர்தலில் அதே தொகுதியில் தவெக வேட்பாளராக மீண்டும் போட்டியிட அவர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.மேலும், 2029-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் தவெக சார்பில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு