Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரும், ஏராளமான இளைஞர்களும் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டங்களுக்கு ஆதரவாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.இந்த சூழலில், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடனும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.மேலும், நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்றும், தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.போராட்டத்தின் போது, மத்திய அரசு மற்றும் கல்வி அமைச்சருக்கு எதிராக முழக்கமிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், "பிரதானை பதவி நீக்கம் செய்" (Barkhaast Karo Pradhan Ko) என்று எழுதப்பட்ட பதாகைகளையும் ஏந்தியிருந்தனர். இதனால் நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு