Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா: திருவள்ளூர் மாவட்டத்துக்கு ஆக. 6-ந்தேதி உள்ளூர் விடுமுறை

திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா: திருவள்ளூர் மாவட்டத்துக்கு ஆக. 6-ந்தேதி உள்ளூர் விடுமுறை
திருத்தணி முருகன் கோவிலில் நடைபெறும் ஆடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 6-ம் தேதி (வியாழக்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கவிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருத்தணியில் அமைந்துள்ள முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழா ஒருநாள் சிறப்பாக நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, மாவட்டம் முழுவதும் ஆகஸ்ட் 6-ம் தேதி உள்ளூர் விடுமுறை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதேவேளை, இந்த விடுமுறை செலவாணி முறிச்சட்டம், 1881-ன் கீழ் வராததால், மாவட்டத்தில் செயல்படும் கருவூலங்கள் மற்றும் சார்நிலை கருவூலங்கள், அரசின் அவசர பணிகளை மேற்கொள்ள தேவையான பணியாளர்களுடன் வழக்கம்போல் இயங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், வழங்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறைக்கான ஈடாக ஆகஸ்ட் 8-ம் தேதி (சனிக்கிழமை) பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இந்த உள்ளூர் விடுமுறை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு