Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
சனி | 29 ஆகஸ்ட் 2026 | 13 ஆவணி பராபவ வருடம்

தமிழ்நாட்டின் உணர்வுகளை மதித்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: மாணிக்கம் தாகூர்

தமிழ்நாட்டின் உணர்வுகளை மதித்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: மாணிக்கம் தாகூர்

நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த மாணவி ஸ்ருதிலயா, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தும் மருத்துவக் கலந்தாய்வில் இடம் கிடைக்காத மனவேதனையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் கடுமையாக உழைத்த இளம் மாணவியை இழந்தது மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மாணவி ஸ்ருதிலயாவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மாணவியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பார்கள் என்றும் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 7.5 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறுகின்றனர். இவர்களில் லட்சக்கணக்கானோர் மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்ற கனவுடன் நீட் தேர்வை எழுதுகின்றனர். ஆனால், மாநிலத்தில் உள்ள மொத்த மருத்துவ இடங்களின் எண்ணிக்கை 13,999 மட்டுமே என அவர் தெரிவித்துள்ளார்.2025-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 76,181 ஆக இருந்த நிலையில், 2026-ம் ஆண்டில் அது 61,306 ஆகக் குறைந்துள்ளதாகவும், இது 19.5 சதவீத வீழ்ச்சி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
சுமார் 15 ஆயிரம் தகுதியான மாணவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பது, நீட் தேர்வு முறையின் மீது மாணவர்களுக்கு நம்பிக்கை குறைந்திருப்பதை வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.நீட் தேர்வு காரணமாக தமிழ்நாட்டு மாணவர்களின் உயிர்களும், மருத்துவக் கனவுகளும் தொடர்ந்து பாதிக்கப்படுவது எப்போது முடிவுக்கு வரும் என்றும் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும், இனி எந்த மாணவரும் நீட் தேர்வு தொடர்பான துயரமான சூழ்நிலையால் உயிரிழக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையிலும், மாணவர்களின் உயிரிழப்புகளை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசும், மத்திய கல்வி மந்திரி பிரஹலாத் ஜோஷியும் கைவிட்டு, தமிழ்நாட்டின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு