Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 13 அக்டோபர் 2026 | 27 புரட்டாசி பராபவ வருடம்

தமிழகத்துக்கு நீர் திறக்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகா திட்டவட்டம்

தமிழகத்துக்கு நீர் திறக்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகா திட்டவட்டம்

நடப்பாண்டில் போதிய மழை இல்லாததால் கர்நாடகாவின் பல பகுதிகளில் வறட்சி நிலவுவதாகவும், இதனால் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 11 டி.எம்.சி. காவிரி நீரைத் திறந்துவிடுவது சிரமம் என்றும் கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. தமிழக டெல்டா மாவட்டங்களின் விவசாயத்துக்கு காவிரி ஆறு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, ஆண்டுதோறும் தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். இந்நிலையில், நடப்பாண்டில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரில் 11 டி.எம்.சி. குறைவாக இருப்பதாகக் குறிப்பிட்ட தமிழக அரசு, அந்த நீரை உடனடியாகத் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு, நீதிபதிகள் விக்ரம் நாத், ஆப்ரேஷ் குமார் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்துக்கு நீர் பற்றாக்குறை இருப்பதாக அந்நாட்டு அரசு தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட அளவைவிட அதிகமாகத் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு தரவுகளை முன்வைப்பதை நீதிபதி விக்ரம் நாத் சுட்டிக்காட்டினார். இந்த முரண்பாடு குறித்து தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, காவிரி மேலாண்மை ஆணையம் தற்போதைய தரவுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு உத்தரவுகளைப் பிறப்பிப்பதாகத் தெரிவித்தார்.

Advertisement
முந்தைய காலங்களில் ஏற்பட்ட நீர் பற்றாக்குறையை ஈடுசெய்வது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படுவதில்லை என்றும் அவர் வாதிட்டார். மேலும், நீர் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் அணைகளில் இருக்கும் நீரின் அளவுக்கு ஏற்ப இரு மாநிலங்களுக்கும் விகிதாசார அடிப்படையில் தண்ணீரைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்றார். ஏற்கெனவே வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள நீரையும் கணக்கில் எடுத்துக்கொள்ளுமாறு காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதற்குப் பதிலளித்த கர்நாடக அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், நடப்பாண்டில் போதிய மழை பெய்யாததால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். குடியிருப்புப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்க தண்ணீரைச் சேமிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். எனவே, தமிழகத்துக்கு 11 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்துவிடுவது கடினம் என்றும் வாதிட்டார். இரு மாநில அரசுகளின் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு