Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 01 அக்டோபர் 2026 | 15 புரட்டாசி பராபவ வருடம்

தனுஷின் 56வது திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட்

தனுஷின் 56வது திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட்

நடிகர் தனுஷின் 56வது திரைப்படமான ‘டி56’ படம் 2027-ம் ஆண்டு கோடை காலத்தில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் பூஜை, கடந்த செப்டம்பர் 25-ம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்றது. ‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை இயக்குகிறார். மதுரையை மையமாகக் கொண்டு உருவாகும் ‘டி56’ படத்தில் தனுஷுடன் எஸ்.ஜே.சூர்யா, பிரீத்தி முகுந்தன், வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பிரைமார்க் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள மாரநாடு கருப்பணசாமி கோவிலில் நடைபெற்ற பூஜை நிகழ்ச்சியில் தனுஷ், இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, எஸ்.ஜே.சூர்யா, பிரீத்தி முகுந்தன், வடிவேலு, இசையமைப்பாளர் சாய் அபயங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

Advertisement
அப்போது தனுஷ், கருப்பணசாமிக்கு 18 அடி நீளமுள்ள அரிவாளை காணிக்கையாக வழங்கினார். படத்தின் பூஜை நிகழ்ச்சியைக் காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். ரசிகர்களின் கூட்டம் மாநாடு போல் காட்சியளித்த நிலையில், தனுஷுக்கு உற்சாகமான வரவேற்பும் அளிக்கப்பட்டது. இதுகுறித்து நடிகர் வடிவேலு பேசுகையில், காரில் வரும் வழியிலேயே ஏராளமான வாகனங்களைப் பார்த்ததாகவும், படத்தின் பூஜை நிகழ்ச்சியே மாநாடு போல் இருந்ததாகவும் தெரிவித்தார். இவ்வளவு ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கவில்லை என்றும், ரசிகர்களின் அன்பும் ஆசீர்வாதமும் தேவை என்றும் அவர் கூறினார். இந்நிலையில், ‘டி56’ படத்தின் பூஜை நிகழ்ச்சியின் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதனுடன், ‘டி56’ திரைப்படம் 2027-ம் ஆண்டு கோடை வெளியீடாக திரைக்கு வரும்என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,640
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு