தங்கம் விலை மீண்டும் உயர்வு.! இன்றைய நிலவரம் என்ன.?
தங்கம் விலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வருகின்றன. கடந்த 3-ந் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்து ரூ.1,13,920 ஆகவும், ஒரு கிராம் ரூ.290 அதிகரித்து ரூ.14,240 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து 4-ந் தேதியும் விலை உயர்ந்த நிலையில் இருந்தது. ஆனால் 5-ந் தேதி தங்கம் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டது. அன்றைய தினம் சவரனுக்கு ரூ.1,360 குறைந்து ரூ.1,13,530-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.170 குறைந்து ரூ.14,190-க்கும் விற்பனையானது. இதையடுத்து நேற்று மீண்டும் தங்கம் விலை கணிசமாக குறைந்தது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.1,13,160-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.125 குறைந்து ரூ.14,145-க்கும் விற்பனை செய்யப்பட்டது.