சர்வதேச போதைப்பொருள் கும்பல் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக போதைப்பொருட்களை கடத்தி வருவதாகவும், அவை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும் டெல்லி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இந்த தகவலைத் தொடர்ந்து, 'ஆபரேஷன் வஜ்ரா' என்ற நடவடிக்கையின் கீழ் கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, நகரிலுள்ள ஒரு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 30 ஆயிரம் கிலோ போதைப்பொருட்கள் மற்றும் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.
Advertisement
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1,000 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்தகடத்தலமற்றும்விற்பனைச்சங்கிலியுடன்தொடர்புடையதாகக் கூறப்படும் கேரளாவைச் சேர்ந்த உமேஷ்குமார், பிரதவுஸ் உள்ளிட்ட 3 பேரை டெல்லி போலீசார் கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.