தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.20 ஆயிரம் பண்டிகைக்கால முன்பணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிறுவன நிர்வாக இயக்குநர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம், சில்லரை மதுபானக் கடைகள் மூலம் பல்வேறு மதுபான வகைகளை விற்பனை செய்து வருகிறது. இக்கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை ரூ.20 ஆயிரம் பண்டிகை முன்பணம் வழங்கப்படுகிறது.
Advertisement
இந்த முன்பணத்தை பெறும் ஊழியர்கள், தங்களது விருப்பத்திற்கேற்ப பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பக்ரீத் உள்ளிட்ட பண்டிகைகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். இந்தத் தொகை ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வட்டி இல்லாமல் வழங்கப்படும். பின்னர், ஊழியர்களின் மாத ஊதியத்தில் இருந்து மாதம் ரூ.2,000 வீதம் 10 மாதங்களுக்கு பிடித்தம் செய்து முன்பணம் திரும்பப் பெறப்படும்.