Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 06 நவம்பர் 2026 | 20 ஐப்பசி பராபவ வருடம்

ஜெகன் மோகன் இல்லத் திருமண விழா: முதல்-அமைச்சர் விஜய், நடிகை திரிஷா பங்கேற்பு

ஜெகன் மோகன் இல்லத் திருமண விழா: முதல்-அமைச்சர் விஜய், நடிகை திரிஷா பங்கேற்பு

ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்-அமைச்சர் விஜய், நடிகை திரிஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத்திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று மாலை சென்னையில் நடைபெற்றது. இதில் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எனப் பல முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர்.

Advertisement
இந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் தனது தாயார் ஷோபா சந்திரசேகர் மற்றும் நடிகை திரிஷாவுடன் கலந்து கொண்டார். தொடர்ந்து, மணமக்களைச் சந்தித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், பிரபல தொழிலதிபர் கவுதம் அதானியும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். விழாவில் விஜய், திரிஷா உள்ளிட்டோர் கலந்துகொண்ட புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு