ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்-அமைச்சர் விஜய், நடிகை திரிஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத்திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று மாலை சென்னையில் நடைபெற்றது. இதில் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எனப் பல முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர். இந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் தனது தாயார் ஷோபா சந்திரசேகர் மற்றும் நடிகை திரிஷாவுடன் கலந்து கொண்டார். தொடர்ந்து, மணமக்களைச் சந்தித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், பிரபல தொழிலதிபர் கவுதம் அதானியும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். விழாவில் விஜய், திரிஷா உள்ளிட்டோர் கலந்துகொண்ட புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.