Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 21 அக்டோபர் 2026 | 4 ஐப்பசி பராபவ வருடம்

சென்னை: யூடியூபர் ஹரீஷ் தற்கொலை; புகாரில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்

சென்னை: யூடியூபர் ஹரீஷ் தற்கொலை; புகாரில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்

சென்னையில் நிதி ஆலோசனைகள் தொடர்பான வீடியோக்கள் மூலம் பிரபலமடைந்த யூடியூபர் ஹரீஷ் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக அவரது தந்தை அளித்துள்ள புகாரில் பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன. சென்னையை அடுத்த முட்டுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஹரீஷ் (27). ‘பைனான்ஸ் வித் ஹரீஷ்’ என்ற பெயரில் அறியப்பட்ட இவர், சமூக வலைதளங்களில் முதலீடு மற்றும் நிதி மேலாண்மை குறித்த தகவல்களை வீடியோக்கள் வாயிலாகப் பகிர்ந்து வந்தார். இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களில் இவரை சுமார் 13 லட்சம் பேர் பின்தொடர்ந்து வந்தனர். இந்நிலையில், ஹரீஷ் வெளியிட்ட வீடியோ ஒன்றில் இடம்பெற்றிருந்த நிதி தொடர்பான தகவல்களின் நம்பகத்தன்மை குறித்து ஜேசன் சாமுவேல் என்பவர் கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது. மேலும், ஹரீஷிடம் இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியமான செபியின் பதிவு பெற்ற உரிமம் இல்லை என்றும் அவர் சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, ஹரீஷின் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் கணக்குகளை மெட்டா நிறுவனம் முடக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement
இருப்பினும், அவர் வேறு பெயர்களில் புதிய கணக்குகளைத் தொடங்கி தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். அந்தக் கணக்குகளிலும் அவருக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், மன உளைச்சலுக்கு ஆளான ஹரீஷ், நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும், கானாத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, ஜேசன் சாமுவேலுக்கு எதிராக ஹரீஷின் தந்தை விநாயகம் கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மிரட்டல் முயற்சிகள் மற்றும் மனரீதியான துன்புறுத்தல்கள் காரணமாகவே தனது மகன் இந்த முடிவை எடுத்ததாகப் புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,490
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு