மயிலம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு 30,041 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சி.வி.சண்முகத்தின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், மயிலம் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் அவர் 30,041 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து கமலக்கண்ணன் என்ற வாக்காளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
Advertisement
இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி சி.வி.சண்முகம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில், இன்று இந்த மனு மீதான உத்தரவைப் பிறப்பித்த நீதிபதி, சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, அவரது தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.