Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 05 நவம்பர் 2026 | 19 ஐப்பசி பராபவ வருடம்

சிவகங்கையில் ஆயுதங்களுடன் இன்ஸ்டா ரீல்ஸ்: மேலும் 2 பேர் கைது

சிவகங்கையில் ஆயுதங்களுடன் இன்ஸ்டா ரீல்ஸ்: மேலும் 2 பேர் கைது

சிவகங்கை மாவட்டத்தில் வாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி, வன்முறையைத் தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிட்ட விவகாரத்தில் மேலும் 2 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. பழிவாங்கும் நோக்கில் வெளியான வீடியோக்கள் சிவகங்கை அருகே ஒக்கூர் மேலமங்கலம் பகுதியில் கடந்த மாதம் 18-ம் தேதி, 'சுள்ளான்' மதன் என்ற ரவுடி பழிவாங்கும் நோக்கில் ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சிவகங்கையில் செயல்பட்டு வரும் எதிரெதிர் ரவுடி குழுக்களும் அவற்றின் ஆதரவாளர்களும் சமூக வலைதளங்களில் மோதல் போக்கை வெளிப்படுத்தினர். இன்ஸ்டாகிராம், முகநூல் உள்ளிட்ட தளங்களில் வாள், அரிவாள் போன்ற ஆயுதங்களைக் கையில் ஏந்தியபடி வீடியோக்களை வெளியிட்டனர். மேலும், அடுத்தடுத்து பழிவாங்குவோம் என்ற எச்சரிக்கையுடன் வன்முறையைத் தூண்டும் வகையிலான வசனங்களையும் பதிவிட்டு வந்தனர். போலீசார் தீவிர கண்காணிப்பு இளைஞர்கள் ஆயுதங்களுடன் ரீல்ஸ் வெளியிடுவது பொதுமக்களின் பாதுகாப்புக்கும், மாவட்டத்தில் நிலவும் அமைதிக்கும் அச்சுறுத்தலாக மாறியதைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதன்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, காவல்துறையின் சமூக வலைதள கண்காணிப்பு பிரிவு மூலம் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

Advertisement
இந்த நடவடிக்கையில், வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவுகள் வெளியிட்டதாக இதுவரை 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 2 இளைஞர்கள் கைது இந்த விவகாரத்தில் ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்டதாக ரிஷி ராஜா (19), கவி சரண் (18) ஆகிய இருவரையும் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். இதன் மூலம் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய 2 சிறுவர்கள் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 210 சமூக வலைதள கணக்குகள் முடக்கம் வன்முறையைப் பரப்பும் வகையிலும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் செயல்பட்டதாகக் கண்டறியப்பட்ட 210 சமூக வலைதள கணக்குகளை காவல்துறையினர் முடக்கியுள்ளனர். எஸ்பி கடும் எச்சரிக்கை சமூக வலைதளங்களில் லைக், வியூஸ் பெறுவதற்காக ஆயுதங்களைக் காட்டி வன்முறையைத் தூண்டும் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா எச்சரித்துள்ளார். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ், ஜாமீனில் வெளிவர முடியாத கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,385
🥈 Silver ₹210.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு