Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 13 அக்டோபர் 2026 | 27 புரட்டாசி பராபவ வருடம்

சவுதியில் தொடர் தாக்குதல்: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு; 1,500 விமான சேவைகள் ரத்து

சவுதியில் தொடர் தாக்குதல்: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு; 1,500 விமான சேவைகள் ரத்து

சவுதி அரேபியாவில் உள்ள முக்கிய விமான நிலையங்களைக் குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், 1,500-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. ஏமனில் அரசு படையினருக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. ஏமன் அரசுக்கு ஆதரவாகச் செயல்படும் சவுதி அரேபிய ராணுவம், ஹவுதி அமைப்பினரைக் குறிவைத்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்குப் பதிலடியாக ஹவுதி கிளர்ச்சியாளர்களும் சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தச் சூழலில், கடந்த 10-ஆம் தேதி சவுதி தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தை நோக்கி ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இந்தியர் ஒருவர் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். மேலும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கிங் காலித், கிங் அப்துல் அஜீஸ், கிங் பஹத் உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் 1,500-க்கும் அதிகமான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

Advertisement
எத்தியாட், பிளை துபாய், லுப்தான்சா உள்ளிட்ட விமான நிறுவனங்களும் சவுதி நகரங்களுக்கான தங்களது சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. இதனால், வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான பயணிகள் சொந்த நாடுகளுக்குத் திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். ரியாத்தில் வங்காளதேசத்தைச் சேர்ந்த 500 பயணிகள் சிக்கியுள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது. மெக்காவுக்குப் புனிதப் பயணம் மேற்கொண்டவர்களும் விமானப் போக்குவரத்து பாதிப்பால் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில், ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் நான்காவது முனையம் மீது நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 11 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, தொடர் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள எண்ணெய் ஆலைகள் மற்றும் விமான நிலையங்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தொடரும் இந்தத் தாக்குதல்களால் அந்நாட்டின் விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு