Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
புதன் | 09 செப்டம்பர் 2026 | 24 ஆவணி பராபவ வருடம்

சவரனுக்கு ரூ.1,000 குறைந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன?

சவரனுக்கு ரூ.1,000 குறைந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன?

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று சவரனுக்கு ரூ.1,000 குறைந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்பதை பார்க்கலாம். கடந்த 3-ம் தேதி தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்தது. இதனால் ஒரு சவரன் ரூ.1,13,920-க்கும், ஒரு கிராம் ரூ.14,240-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து 4-ம் தேதியும் தங்கம் விலை அதிகரித்தது. ஆனால், 5-ம் தேதி தங்கம் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டது. சவரனுக்கு ரூ.1,360 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,530-க்கும், கிராமுக்கு ரூ.170 குறைந்து ஒரு கிராம் ரூ.14,190-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று தங்கம் விலை மீண்டும் கணிசமாக உயர்ந்தது.

Advertisement
சவரனுக்கு ரூ.1,120 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,14,160-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கத்தின் விலையும் ரூ.140 உயர்ந்து ரூ.14,270-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே நேரத்தில் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.1,13,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.125 குறைந்து ரூ.14,145-ஆக உள்ளது. வெள்ளி விலையில் இன்றும் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு