தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று சவரனுக்கு ரூ.1,000 குறைந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்பதை பார்க்கலாம். கடந்த 3-ம் தேதி தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்தது. இதனால் ஒரு சவரன் ரூ.1,13,920-க்கும், ஒரு கிராம் ரூ.14,240-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து 4-ம் தேதியும் தங்கம் விலை அதிகரித்தது. ஆனால், 5-ம் தேதி தங்கம் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டது. சவரனுக்கு ரூ.1,360 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,530-க்கும், கிராமுக்கு ரூ.170 குறைந்து ஒரு கிராம் ரூ.14,190-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று தங்கம் விலை மீண்டும் கணிசமாக உயர்ந்தது. சவரனுக்கு ரூ.1,120 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,14,160-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கத்தின் விலையும் ரூ.140 உயர்ந்து ரூ.14,270-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே நேரத்தில் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.1,13,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.125 குறைந்து ரூ.14,145-ஆக உள்ளது. வெள்ளி விலையில் இன்றும் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.