சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்: 4 இந்தியர்கள் உயிரிழப்பு; ரஷிய தூதருக்கு மத்திய அரசு சம்மன்
ரஷியா–உக்ரைன் இடையிலான போர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த மோதலில் இரு நாடுகளிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், தாக்குதல்களும் இடையறாது நீடித்து வருகின்றன.இந்த சூழலில், உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தில் இருந்து கடந்த 19-ஆம் தேதி கினியா-பிசாவ் நாட்டுக் கொடியுடன் புறப்பட்டுச் சென்ற சரக்கு கப்பல் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த தாக்குதலில் கப்பலில் இருந்த 4 இந்தியர்கள் உயிரிழந்தனர்.
மேலும், ஒரு இந்திய மாலுமி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், தாக்குதல் தொடர்பாக விளக்கம் கோரி ரஷியாவின் தூதருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.