Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 14 அக்டோபர் 2026 | 28 புரட்டாசி பராபவ வருடம்

கூட்டுறவு அங்காடிகளில் கிலோ ரூ.50-க்கு சன்ன ரக அரிசி விற்பனை? தமிழக அரசு ஆலோசனை

தமிழகத்தில் சன்ன ரக அரிசியின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால், பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை குறைந்த விலையில் அரிசி விற்பனை செய்ய தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. தமிழகத்தில் அரிசி வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனையான சன்ன ரக அரிசி, தற்போது ரூ.70 முதல் ரூ.80 வரை விற்கப்படுகிறது. அரிசி மட்டுமின்றி, பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளன. இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக, உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் தலைமையில் விலை கண்காணிப்புக் குழுவின் ஆய்வுக் கூட்டம் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தலைமைச் செயலாளர் சாய்குமார், உணவுத்துறை செயலாளர் அமுதா, நிதித்துறை செயலாளர் சித்திக் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Advertisement
கூட்டத்தில், அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்கவும், விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதுதொடர்பாக கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்திய உணவுக் கழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து சன்ன ரக அரிசியைக் கொள்முதல் செய்து, கூட்டுறவு அங்காடிகளில் கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்வது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகத் தெரிவித்தார். மேலும், அரிசி கிடைக்கக்கூடிய மாநிலங்கள், அங்கிருந்து கொள்முதல் செய்ய இயலும் அளவு ஆகிய விவரங்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 1 லட்சம் டன் அரிசியைப் பெறுவது உறுதியானால், கூட்டுறவு அங்காடிகள் வாயிலாக பொதுமக்களுக்கு குறைந்த விலையில் அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,590
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு