Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 26 அக்டோபர் 2026 | 9 ஐப்பசி பராபவ வருடம்

காதலியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த இளைஞர்.. லாரி முன் பாய்ந்து உயிரிழந்த சோகம்

காதலியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த இளைஞர்.. லாரி முன் பாய்ந்து உயிரிழந்த சோகம்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே காதலியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த இளைஞர், பின்னர் லாரி முன் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் ஓசூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமனூரைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மகள் திவிஜாஸ்ரீ (21). இவர் ஓசூரில் உள்ள பிரபல தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார். அதேபோல், ஜோலார்பேட்டை அருகேயுள்ள சின்ன வேப்பம்பட்டியைச் சேர்ந்த மணியரசனின் மகன் பிரதீப் (25), ஓசூர் அருகே ஜீமங்கலம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு பிரதீப் தனது அறைக்கு திவிஜாஸ்ரீயை அழைத்துள்ளார். அங்கு இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தகராறு தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த பிரதீப் அறையில் இருந்த அரிவாளால் திவிஜாஸ்ரீயை சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காதலி உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பிரதீப், அறையிலிருந்து வெளியே ஓடி வந்துள்ளார்.

Advertisement
பின்னர், ஓசூர் - பாகலூர் சாலையில் சென்று கொண்டிருந்த லாரியின் முன் திடீரென பாய்ந்துள்ளார். இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பிரதீப் உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த பாகலூர் போலீசார், பிரதீப்பின் அறையில் உயிரிழந்து கிடந்த திவிஜாஸ்ரீயின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலர்களுக்குள் ஏற்பட்ட தகராறுக்கு என்ன காரணம்? இருவரும் வழக்கம்போல் மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டிருந்ததாகக் கூறப்படும் நிலையில், திடீரென அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதுதொடர்பாகவும், பிரதீப் உயிரை மாய்த்துக்கொண்டதற்கான பின்னணி குறித்தும் அவர்களது நண்பர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலியைக் கொலை செய்துவிட்டு இளைஞர் உயிரிழந்த இந்தச் சம்பவம் ஓசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,070
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு