Skip to main content
🌤️ —°C
செவ்வாய் | 18 ஆகஸ்ட் 2026 | 2 ஆவணி பராபவ வருடம்

காஞ்சிபுரம் கோவில் திருவிழாவில் மோதல்: 2 பேர் உயிரிழப்பு

காஞ்சிபுரம் கோவில் திருவிழாவில் மோதல்: 2 பேர் உயிரிழப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற அம்மன் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு வன்முறையாக மாறி, 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படுநெல்லி பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டிருந்தனர். அப்போது, ஒலிபெருக்கியில் கானா பாடல்களை ஒலிபரப்ப வேண்டும் என்று சிலர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு பின்னர் தகராறாக மாறியது.தகராறு தீவிரமடைந்த நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்த மோதலில் 2 பேர் கொல்லப்பட்டனர்.சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இந்த நிலையில், சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, அவர்களின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதையடுத்து, அந்தப் பகுதியில் மேலும் பதற்றம் ஏற்படாமல் தடுக்க 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு