Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 01 அக்டோபர் 2026 | 15 புரட்டாசி பராபவ வருடம்

களத்தில் இனி ரொனால்டோ இல்லையா? ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்

களத்தில் இனி ரொனால்டோ இல்லையா? ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்

போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தேசிய அணியின் பயிற்சி முகாமில் இருந்து திடீரென வெளியேறியுள்ளார். டென்மார்க்குக்கு எதிரான போட்டி நடைபெற உள்ள நிலையில் இந்த முடிவு வெளியாகியுள்ளது. சமீபத்தில் நார்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரொனால்டோ முழு நேரமும் பெஞ்சில் அமர்ந்திருந்தார். இதையடுத்து டென்மார்க்குக்கு எதிரான போட்டியிலும் அவரை தொடக்க வீரராக களமிறக்கப் போவதில்லை என பயிற்சியாளர் ஜீசஸ் தெரிவித்திருந்தார். இருப்பினும், ரொனால்டோவுக்கும் தனக்கும் இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார். இந்த சூழலில், போர்ச்சுகல் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் பெட்ரோ ப்ரோயென்சாவுடன் ரொனால்டோ ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் தேசிய அணியின் பயிற்சி முகாமில் இருந்து வெளியேற அவர் முடிவு செய்துள்ளார்.

Advertisement
தனது இந்த முடிவுக்கான உண்மையான காரணங்களை உரிய நேரத்தில் போர்ச்சுகல் மக்களிடம் தெரிவிப்பதாகவும் ரொனால்டோ கூறியுள்ளார். ரொனால்டோ முகாமில் இருந்து வெளியேறியதை போர்ச்சுகல் கால்பந்து கூட்டமைப்பும் உறுதி செய்துள்ளது. மீதமுள்ள 24 வீரர்களுடன் போட்டிகளுக்கான பயிற்சிகள் மற்றும் தயாரிப்புகள் திட்டமிட்டபடி தொடரும் என கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ரொனால்டோவின் இந்த திடீர் விலகல், அவரது சர்வதேச கால்பந்து பயணம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. போர்ச்சுகல் அணிக்காக இனி சர்வதேச போட்டிகளில் அவர் விளையாடமாட்டார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேவேளை, கிளப் அணிக்கான போட்டிகளில் ரொனால்டோ தொடர்ந்து விளையாடுவார் என கூறப்படுகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,640
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு