Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

கரூர் கூட்ட நெரிசி உயிரிழப்புகள்: அரசு வேலை வழங்கியது கொள்கை முடிவு; ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்

கரூர் கூட்ட நெரிசி உயிரிழப்புகள்: அரசு வேலை வழங்கியது கொள்கை முடிவு; ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்
கரூர் கூட்ட நெரிசி சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்பட்டிருப்பது அரசின் கொள்கை அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கரூர் வேலுசாமிபுரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசி விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்பட்டது. இந்த நடவடிக்கையை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.வழக்கை விசாரித்தபோது, உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலை வழங்கும் வகையில் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவோ, நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கவோ கூடாது என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசின் பதில் மனு முழுமையாக தயாராகவில்லை என்பதால் விசாரணையை ஜூலை 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்க அரசுத் தரப்பு கேட்டுக்கொண்டது.
Advertisement
இதனை ஏற்று நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.இதன்படி, திங்கள்கிழமை மீண்டும் விசாரணை நடைபெற்ற நிலையில், தமிழக அரசு தனது பதில் மனுவை தாக்கல் செய்தது.அதில், 31 பேருக்கு அரசு பணி வழங்கப்பட்டிருப்பது அரசின் கொள்கை முடிவின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்றும், அரசியலமைப்புச் சட்டத்தின் விதிமுறைகளுக்கு இணங்கவே அந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நியமனங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) ஒப்புதல் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பு விளக்கியுள்ளது.இதே வழக்கில், இந்த நியமனங்களுக்கு டிஎன்பிஎஸ்சியின் அனுமதி தேவையில்லை என்ற நிலைப்பாட்டைத் தெரிவித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமும் தனிப்பட்ட பதில் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு