கன்னியாகுமரி: பெண் தற்கொலை வழக்கில் த.வெ.க. பிரமுகர் கைது
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் த.வெ.க. பிரமுகரை போலீசார் கைது செய்து நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்துள்ளனர்.மாவட்டத்தின் மூலைப்பாகம் பகுதியைச் சேர்ந்த மகேஷ் துபாயில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி அனிஷா (33), தனியார் பள்ளி அலுவலகத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 12-ஆம் தேதி, தனது கணவருக்கு வீடியோ பதிவு ஒன்றை அனுப்பிய அனிஷா, “இது நான் அவன் மீது விருப்பப்பட்டு செய்தது கிடையாது. என்னை அவன் வாழ விடமாட்டான்” எனக் கூறிய பின்னர் தூக்கிட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அனிஷா தனது வீடியோவில் குறிப்பிட்ட நபர் த.வெ.க.
பிரமுகர் சங்கர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, சென்னை பல்லாவரத்தில் நண்பர் வீட்டில் தலைமறைவாக இருந்த சங்கரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட சங்கர் நேற்று பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர், நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.