Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 06 அக்டோபர் 2026 | 20 புரட்டாசி பராபவ வருடம்

குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்: மக்கள் அச்சம்

குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்: மக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வரும் சிறுத்தைகள், அங்குள்ள செல்லப்பிராணிகளை வேட்டையாடிச் செல்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு கோத்தகிரி அருகே உள்ள கெனடா கிராமத்தில் சிறுத்தை ஒன்று சாலையில் நடமாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அப்போது கார் ஒன்று வருவதைக் கண்ட சிறுத்தை அங்கிருந்து வேகமாக ஓடியது. இந்தக் காட்சியை காரில் சென்றவர்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் காணப்படுவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, சிறுத்தையைப் பிடிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,675
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு