Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 18 செப்டம்பர் 2026 | 2 புரட்டாசி பராபவ வருடம்

எம்.பி.பி.எஸ். படிக்காமல் சிகிச்சை: போலி டாக்டரை கைது செய்த போலீசார்

எம்.பி.பி.எஸ். படிக்காமல் சிகிச்சை: போலி டாக்டரை கைது செய்த போலீசார்

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே, உரிய மருத்துவக் கல்வித் தகுதி இல்லாமல் நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்ததாகக் கூறப்படும் 68 வயது அந்தோணிதாஸை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் பாரதி தலைமையிலான மருத்துவத்துறை அதிகாரிகள், வடமதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கொம்பேறிபட்டியில் செயல்பட்டு வந்த ஒரு மருத்துவமனையில் அந்தோணிதாஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. அவரிடம் எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட முறையான மருத்துவக் கல்வித் தகுதி இல்லாத நிலையில், ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததாக மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement
மேலும், அந்த மருத்துவமனையில் காலாவதியான கருக்கலைப்பு மாத்திரைகள் மற்றும் ஆங்கில மருத்துவ மாத்திரைகள் இருப்பதும் ஆய்வின்போது கண்டறியப்பட்டது. இதையடுத்து மருத்துவத்துறை அதிகாரிகள் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், உரிய மருத்துவத் தகுதி இல்லாமல் சிகிச்சை அளித்ததாக அந்தோணிதாஸை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மருத்துவமனை அப்பகுதியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்ததாக குறிப்பிடப்படுகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு