Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 03 நவம்பர் 2026 | 17 ஐப்பசி பராபவ வருடம்

'என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்' வெள்ளத்துரைக்கு அதிமுகவில் வாய்ப்பு? அம்பையில் போட்டியிடுவாரா

'என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்' வெள்ளத்துரைக்கு அதிமுகவில் வாய்ப்பு? அம்பையில் போட்டியிடுவாரா

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக சார்பில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி வெள்ளத்துரை களமிறங்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அத்தொகுதியில் அரசியல் பரபரப்பு அதிகரித்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இதையடுத்து அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தேர்தலில் தவெக சார்பில் இசக்கி சுப்பையாவே மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அம்பாசமுத்திரம் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார். தற்போது நடைபெற உள்ள இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அவரது மகன் பிரபாகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் ராமசுப்பிரமணியன் போட்டியிடுவார் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே, ஓய்வுபெற்ற காவல் அதிகாரியும், 'என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்' என அறியப்படுபவருமான வெள்ளத்துரை, கடந்த இரு நாட்களுக்கு முன்பு அதிமுகவில் இணைந்தார். இதனால் அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முன்னதாக, சட்டமன்றத் தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் சசிகலா கட்சி சார்பில் போட்டியிட்ட வெள்ளத்துரை, 1,048 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார். மறுபுறம், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அம்பாசமுத்திரம் தொகுதியில் தாம் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். இதற்கிடையில், வரும் 14-ம் தேதி அம்பாசமுத்திரம் தொகுதிக்கு முதல்-அமைச்சர் விஜய் வருகை தர உள்ளார். இதனால் இடைத்தேர்தலை முன்னிட்டு அத்தொகுதியில் அரசியல் நடவடிக்கைகள் தீவிரமடைந்து, தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு