Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

உலக சதுரங்க நாள்: வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து

உலக சதுரங்க நாள்: வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து
உலக சதுரங்க நாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் விஜய் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.அந்த பதிவில், உலக சதுரங்க நாளையொட்டி சதுரங்கத்தை நேசிக்கும் அனைத்து வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.மேலும், இந்தியாவில் அதிகளவில் இளம் கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாகவும் குறிப்பிட்டார். 1988-ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டரான விஸ்வநாதன் ஆனந்த் தொடங்கி, குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி உள்ளிட்ட பல இளம் கிராண்ட் மாஸ்டர்கள் சர்வதேச சதுரங்க அரங்கில் சிறப்பான வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்து வருவதாகவும், அவர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.உலக சதுரங்க அரங்கில் தமிழ்நாடு முக்கிய மையமாக வளர்ந்து வரும் இந்தச் சூழலில், இளைய தலைமுறையினர் சதுரங்கத்தில் திறமையை மேம்படுத்தி சர்வதேச போட்டிகளில் பங்கேற்று தமிழ்நாடு மற்றும் இந்தியாவுக்கு மேலும் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.அத்தகைய திறமைகளை ஊக்குவிக்கும் முயற்சிகளுக்கு தமிழக அரசு தொடர்ந்து முழு ஆதரவையும் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும் என்றும் தனது பதிவில் முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு