Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 07 அக்டோபர் 2026 | 21 புரட்டாசி பராபவ வருடம்

உப்பு உற்பத்தி அதிகரித்து விலை சரிந்தது... உற்பத்தியாளர்கள் வேதனை

உப்பு உற்பத்தி அதிகரித்து விலை சரிந்தது... உற்பத்தியாளர்கள் வேதனை

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்தத் தொழிலில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், வேதாரண்யம் பகுதியில் நாளொன்றுக்கு சுமார் 300 டன் வரை உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இதுவரை சுமார் 10 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு, பல்வேறு இடங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உப்பின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் அதன் விலை சரிந்துள்ளது. வியாபாரிகள் ஒரு கிலோ உப்புக்கு 60 பைசா மட்டுமே வழங்க முன்வருவதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். மின்சாரக் கட்டணம், தொழிலாளர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட செலவுகளை சமாளிக்க ஒரு கிலோ உப்புக்கு குறைந்தபட்சம் ரூ.1 கிடைக்க வேண்டும் என அவர்கள் கூறுகின்றனர்.

Advertisement
குறைந்த விலைக்கு உப்பை விற்பனை செய்தால் உற்பத்திச் செலவுகளைக் கூட ஈடுகட்ட முடியாத நிலை ஏற்படும் என உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். உப்பு உற்பத்தி அதிகமாக இருப்பதால், வியாபாரிகளும் குறைந்த விலைக்கே கொள்முதல் செய்ய முன்வருவதாக கூறப்படுகிறது. இதனால் மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதா அல்லது தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதா என்ற சிக்கலில் உற்பத்தியாளர்கள் தவித்து வருகின்றனர். இந்தச் சூழ்நிலை காரணமாக பல உற்பத்தியாளர்கள் உப்பு உற்பத்திப் பணிகளை நிறுத்தத் தொடங்கியுள்ளனர். இந்த நிலை தொடர்ந்து நீடித்தால், வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்படும் நிலை உருவாகும் என உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,675
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு