Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
ஞாயிறு | 13 செப்டம்பர் 2026 | 28 ஆவணி பராபவ வருடம்

இன்ஸ்டாகிராமில் அடியெடுத்து வைத்த ஹாலிவுட் நடிகை... ‘தப்பாக பேசினால் வெளியேறிவிடுவேன்’ - முதல் பதிவிலேயே எச்சரிக்கை

இன்ஸ்டாகிராமில் அடியெடுத்து வைத்த ஹாலிவுட் நடிகை... ‘தப்பாக பேசினால் வெளியேறிவிடுவேன்’ - முதல் பதிவிலேயே எச்சரிக்கை

பிரபல ஹாலிவுட் நடிகையும் தயாரிப்பாளருமான ஜெனிபர் லாரன்ஸ், 36, முதல்முறையாக இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கியுள்ளார். சமூக வலைதளத்தில் தனது முதல் பதிவாக வெளியிட்ட வீடியோவிலேயே, தரக்குறைவான கருத்துகளை பதிவிடுவோருக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ‘எக்ஸ் மென்’ திரைப்படத் தொடரில் ‘மிஸ்டிக்’ கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் உலகளவில் பிரபலமானவர் ஜெனிபர் லாரன்ஸ். ‘தி ஹங்கர் கேம்ஸ்’, ‘அமெரிக்கன் ஹசில்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களிலும் இவர் நடித்துள்ளார். 2012-ம் ஆண்டு வெளியான ‘சில்வர் லைனிங்ஸ் பிளேபுக்’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதையும் அவர் பெற்றார். ஹாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஜெனிபர் லாரன்ஸ் இதுவரை சமூக வலைதளங்களில் இருந்து விலகியே இருந்தார். இந்நிலையில், தற்போது முதன்முறையாக இன்ஸ்டாகிராமில் தனது அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கி, அதில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisement
அந்த வீடியோவில், இன்ஸ்டாகிராமை முயற்சி செய்து பார்க்க முடிவு செய்துள்ளதாக ஜெனிபர் லாரன்ஸ் தெரிவித்துள்ளார். மேலும், யாராவது தவறான அல்லது மோசமான கருத்துகளை பதிவிட்டால், எந்த தயக்கமும் இன்றி இன்ஸ்டாகிராமில் இருந்து விலகிவிடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார். மோசமான கமெண்ட்டுகள் ஒரு குழந்தையை பாதிக்கும் என்றும், அந்தக் குழந்தை தான்தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் இணைந்த ஜெனிபர் லாரன்ஸுக்கு ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். அவரது கணக்கை இதுவரை சுமார் 56 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு