Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 13 அக்டோபர் 2026 | 27 புரட்டாசி பராபவ வருடம்

இனி நாடு முழுவதும் பல ‘ஜந்தர் மந்தர்கள்’ உருவாகும் - அபிஜீத் திப்கே எச்சரிக்கை

இனி நாடு முழுவதும் பல ‘ஜந்தர் மந்தர்கள்’ உருவாகும் - அபிஜீத் திப்கே எச்சரிக்கை

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் மூலம் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் வாக்குகளைத் திருடியதாக ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அவர் பதவி விலக வலியுறுத்தி, கடந்த 6-ம் தேதி முதல் டெல்லியில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தேர்தல் ஆணையத்தை நோக்கிய பேரணி, ஜந்தர் மந்தரில் தர்ணா, மகாத்மா காந்தி நினைவிடத்தில் அமைதிப் போராட்டம் என ‘இந்தியா’ கூட்டணி மற்றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி உள்ளிட்ட கட்சிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடைக்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ஜந்தர் மந்தரை அங்கீகரிக்கப்பட்ட போராட்ட இடங்களின் பட்டியலில் இருந்து நீக்கியிருப்பதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் அச்சம் வெளிப்பட்டுள்ளது.

Advertisement
ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த முடியாவிட்டால், போராட்டங்கள் முடிவுக்கு வந்துவிடும் என்று அவர் நினைக்கிறார். ஆனால், அது ஒருபோதும் நடக்காது. இனிவரும் காலங்களில் நாடு முழுவதும் பல ஜந்தர் மந்தர்கள் உருவாகும். ஒட்டுமொத்த நாடும் போராட்டக் களமாக மாறி, எதிர்ப்புப் போராட்டங்கள் வெடிக்கும். மத்தியில் ஆட்சி செய்பவருக்கு உண்மையான பிரச்சினை போராட்டம் நடைபெறும் இடம் அல்ல. மக்கள் தனக்கு எதிராகப் போராடுவதை அவர் விரும்பவில்லை என்பதையே இந்தத் தடை காட்டுகிறது. அடுத்ததாக, நாட்டின் ஜனநாயகத்திற்கே தடை விதிக்கவும் அவர் துணியக்கூடும். இவ்வாறு அபிஜீத் திப்கே தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு