Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 13 அக்டோபர் 2026 | 27 புரட்டாசி பராபவ வருடம்

இங்கிலாந்து அணியின் பயிற்சிக் குழுவில் சி.எஸ்.கே. முன்னாள் பயிற்சியாளர்களை இணைத்த ஸ்டீபன் பிளெமிங்

இங்கிலாந்து அணியின் பயிற்சிக் குழுவில் சி.எஸ்.கே. முன்னாள் பயிற்சியாளர்களை இணைத்த ஸ்டீபன் பிளெமிங்

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்க உள்ள ஸ்டீபன் பிளெமிங், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியில் தன்னுடன் பணியாற்றிய ஜேம்ஸ் பாஸ்டர் மற்றும் எரிக் சைமன்ஸ் ஆகியோரை இங்கிலாந்து அணியின் பயிற்சிக் குழுவில் சேர்த்துள்ளார். இதனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (ECB) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக நீண்ட காலம் பணியாற்றியவர் ஸ்டீபன் பிளெமிங். தற்போது இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சிப் பொறுப்பை ஏற்கவுள்ள அவர், தனக்குப் பரிச்சயமான பயிற்சியாளர்களையும் புதிய குழுவில் இணைத்துள்ளார். இதன்படி, 2018 முதல் 2026 வரை சி.எஸ்.கே. அணியின் பயிற்சிக் குழுவில் இருந்த எரிக் சைமன்ஸ், இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சுப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான ஜேம்ஸ் பாஸ்டர், பீல்டிங் பயிற்சியாளராகச் செயல்பட உள்ளார். தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளரான எரிக் சைமன்ஸ், இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு ஆலோசகராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

Advertisement
ஜேம்ஸ் பாஸ்டர், 2018 முதல் 2022 வரை இங்கிலாந்து அணியின் வெள்ளைப் பந்து கிரிக்கெட் ஆலோசகராக இருந்துள்ளார். இதுதவிர, நியூசிலாந்து அணியின் பயிற்சிக் குழுவிலும் இடம்பெற்றுள்ள அவர், ஐபிஎல், பாகிஸ்தான் சூப்பர் லீக், வங்கதேச பிரீமியர் லீக் உள்ளிட்ட தொடர்களிலும் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சிக் குழுவில் ரிச்சர்ட் டாசன் மற்றும் மார்கஸ் டிரெஸ்கோதிக் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இதில் ரிச்சர்ட் டாசன், சுழற்பந்து வீச்சுக்கான தேசியப் பொறுப்பையும் கவனிக்க உள்ளார். இதற்கிடையே, இங்கிலாந்தின் வெள்ளைப் பந்து கிரிக்கெட் அணிகளின் தலைமைப் பயிற்சியாளராக பிரெண்டன் மெக்கல்லம் தொடர்ந்து செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது பயிற்சிக் குழுவில் சாரா டெய்லர், ஜீதன் படேல் மற்றும் டிம் சவுத்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு